பயிர் பாதுகாப்பு :: சீத்தாப்பழம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வாலுள்ள மாவுப்பூச்சி: பெர்சியா விர்கேட்டா 


சேதத்தின் அறிகுறி:
  • பூச்சிகள்: இலைகள், இளம் தளிர்கள் மற்றும் பழங்களில் இருக்கும் (பிரிவுகளுக்கும் இடையே)
  • இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்
  • பழத்தின் அளவு குறைந்து விடுவதால் சந்தையில் நல்ல விலை கிடைக்காது

பூச்சியின் விபரம்:

  • இளம் புழு:  இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
  • பூச்சி: முதிர் பருவ பூச்சிகள் நீளமான, மெல்லிய இறக்கைகள் அற்ற வெண்மை நிற மெழுகு மேற்பகுதிகளை கொண்டதாக இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பூச்சியினால் பாதிக்கப்பட்ட இலைகள், பழங்கள் மற்றும் தண்டுகளை ஒருங்கிணைத்து அழிக்க வேண்டும்.
  • டைகுளோரோவஸ் (Dichlorovas) 0.05 % என்ற அளவில் 2 முறை தெளிக்கவும், ஒருமுறை  புதியதாக பூக்கும் போதும் மற்றொரு முறை பழங்கள் உருவாகும் போதும்
  • கிரிப்டொலெமஸ் மண்ட்ரோஸிரி  பூச்சியை @ 10/மரம் விடவேண்டும்

 

custardpest2

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015