மொக்குப்புழு : னூர்டா மொரிங்கே
தாக்குதலின் அறிகுறிகள்:
- பூ மொக்ககளை புழுக்கள் துளையிட்டு சாப்பிடும், தாக்கப்பட்ட பூ மற்றும் மொக்குகள் உதிர்ந்து விடுகின்றன
பூச்சியின் விபரம்:
- முட்டை: வெண்ணிற நீள்வட்ட முட்டைகளை மொக்குகளில் தனியே இடும்.
- புழு: புழுக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். தலை மற்றும் முன்மார்பு உறை கருப்பு நிறத்தில் இருக்கும்
- கூட்டுப்புழு: மண் பட்டுக்கூட்டில் கூட்டுப்புழு பருவம் மேற்கொள்ளும்
- பூச்சி:
- முன்இறக்கைகள் : பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- பின்இறக்கைகள் : வெண்ணிறத்திலும் அதன் ஓரங்களில் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
கட்டுப்படுத்தம் முறை:
- உதிர்ந்த பூ மற்றும் மொக்குகளைப் பொறுக்கி அழித்தல்
- ஹெக்டேருக்கு 1 லிட்டர் மாலத்தியான் தெளிக்க வேண்டும்
|
|