பயிர் பாதுகாப்பு :: அத்திபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்
ஆந்தராக்னோஸ் - குளோமெருலா சிங்குலேட்டா

அறிகுறிகள்:

  • இந்தப் பூசணம் பழங்கள் மற்றும் இலைகளை தாக்கும். பாதிக்கப்பட்ட பழங்களில் மென்மை அழுகல் நோய் காணப்படும். பழங்கள் முதிரும் முன்பே உதிர்ந்துவிடும்.
  • முதிராத பழங்கள் வறண்டு மரத்திலேலே இருக்கும். பழங்களின் மேல் சிறிய, ஆழமான புள்ளிகள் தோன்றும். அந்தப் பகுதிகள் நிறம் மாறிக் காணப்படும்.
  • அந்தப் பகுதிகள் பெரிதாகி மாறி இளஞ்சிவப்பு நிறத்தில் பூசண வித்துக்கள் அதிகமாக உருவாகி பழங்கள் முழுவதையும் மூடிவிடும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளின் விளிம்புகள் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும் பொழுது உதிர்வு ஏற்படும்.

கட்டுப்பாடு:

  • அத்திப்பழத்தை நடவு செய்யும் இடங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். நோய் தாக்கப்பட்ட பழங்கள் மற்றும் இலைகளை அகற்றிவிட வேண்டும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015