அத்தித் தேமல் - நச்சுயிரி
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட அத்தியில் உள்ள இலைகளில் மஞ்சள் நிறத்தில் தோன்றும், ஓக் இலைகள் போலவும், வளையம் போன்ற புள்ளிகளும், அல்லது மிதமான திட்டுக்களும் காணப்படும்.
- இலைகள் இயல்பானதை விட சிறியதாகவும், உருகுலைந்தும் காணப்படும். முதிரும் முன்பே இலைகள் உதிர்ந்துவிடும். பழங்களும் உதிர நேரிடும்.
- செடிகள் வெட்டும் பொழுது நச்சுயிரி பரவும்
கட்டுப்பாடு:
- சுத்தமான இனப்பெருக்கதிற்காக இருப்பு வைத்திருக்கும் பயிரைத் தேர்வு செய்ய வேண்டும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
|
|