பயிர் பாதுகாப்பு :: அத்திபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்

அத்தித் துரு நோய் - பைசோபெல்லா பிசி

அறிகுறிகள்:

  • இலைகள் சிறியதாகவும், முக்கோண வடிவிலும், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.
  • இந்தப் புள்ளிகள் பெரியதாக மாறாது ஆனால் ஆழ்ந்த மஞ்சள் நிறமாக மாறி இறுதியில் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறிவிடும்.
  • விளிம்புகளில் உள்ள புள்ளிகள் சிவப்பு நிறமாகத் தோன்றும். மேல் பகுதியில் உள்ள புள்ளிகள் மென்மையாகவும், அடிப்பகுதியில் உள்ள புள்ளிகளில் சிறிய கொப்புளம் போன்று காணப்படும்.
  • இவை முதிரும் பொழுது பழுப்பு நிற பூசண வித்துக்கள் கொப்புளங்களை வெளிப்படுத்தும். நோய்த் தாக்குதல் தொடர்ந்தால். இலைகள் அதிகப்படியான மஞ்சள் நிறத்தில் மாறி இறுதியில் இலை விளிம்புகளைச் சுற்றி இறக்க நேரிடும்.
  • இறுதியாக இறந்து உதிர்ந்துவிடும். இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் முழுமையாக உதிர்ந்து விடும். இந்த அத்தித் துரு நோய் பழங்கள் முதிர்ச்சியடையும் பொழுது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.

கட்டுப்பாடு:

  • இளவேனிற் பருவ தொடக்கத்தில் முதல் இலை முழுவதுமாக வளர்ந்த பின் பூசணக் கொல்லியை அடிக்க ஆரம்பிக்க வேண்டும்.
  • புதிதாக முளைக்கும் பொழுது கூடுதலாக செயல்படுத்தப்பட வேண்டும்.
  • பழங்கள் கால்வாசியாக இருக்கும் பொழுது  மருந்தை தெளிக்கக் கூடாது. தெளித்தால் பழத்தின் உருவம் மாறிவிடும்.
  • பழங்களை அறுவடை செய்த பிறகு மருந்தைத் தெளிக்க வேண்டும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015