பயிர் பாதுகாப்பு :: ஜெர்பரா பயிரைத் தாக்கும் நோய்கள்

பறவைக் கண் பழம் அழுகல்: கொலிட்டோட்ரைக்கம் க்ளியோஸ்போரைடஸ்

சேதத்தின் அறிகுறி:

  • நோயானது வட்ட, சிறிய, செம்பழுப்பு புள்ளிகளாகத் தோன்றும்.
  • இலைகள் ஈரமான வானிலையில் ஒன்றுடன் ஒன்று இணைந்து தோய்ந்து சுருண்டு காய்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • அதிகப்படியாக நீர்ப் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும் மற்றும் தாவரங்கள் கூட்டமாக வளர்வதை தவிர்க்க வேண்டும்.
  • நோய் தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழித்துவிட வேண்டும்.
  • ஒரு லிட்டர் தண்ணிரில் 2 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸை தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016