பூ கருகுதல்: ஃபைட்டோப்தோரா பால்மிவோரா
சேதத்தின் அறிகுறி:
- பூவின் தண்டு மற்றும் இதழ்களில் வெளிர் பழுப்பு, ஒழுங்கற்ற, நீர் தோய்ந்த புள்ளிகள் தோன்றும்.
- புள்ளிகள் விரைவாக அதிகரிக்கும் மற்றும் அவை ஒன்றிணைந்து காயங்கள் போல் தோன்றும்.
- ஈரப்பதமான சூழ்நிலையில், தொற்று கடுமையாக பூ முழுவதும் பரவுகிறது. இதன் விளைவாக பூ கருகுதல் மற்றும் பூ தண்டும் அழுகி விடும்.
- மழை தூறுதல் மற்றும் குளிர்ந்த ஈரப்பதமான வானிலை இந்நோய்கு சாதகமாக அமையும். பூஞ்சை மண் வழியாக பரவும் மற்றும் தொற்று மண்ணின் அடித் தளத்திலேயே ஆரம்பிக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- பயிரிடுவதற்கு நோயற்ற மண்ணை பயன்படுத்துவதன் மூலம் நோய் தாக்கம் குறைகிறது.
- பாதிக்கப்பட்ட பூக்களை சேகரித்து அழித்துவிட வேண்டும்.
- அதிகப்படியாக நீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும்.
|