மென்மையழுகல் அல்லது கிழங்கு அழுகல் : பைத்தியம் அப்ஹேனிடெர்மேட்டம் /பி.வெக்சன்ஸ்/பி.மைரியேடில்லம்
|
அறிகுறிகள்:
- நோய் தாக்கம் முதலில் போலித் தண்டின் கழுத்துப்பட்டை பகுதியில் தொடங்கி பின் கீழ்நோக்கி பரவிவிடும். தாக்கப்பட்ட போலித்தண்டின் கழுத்துப்பட்டைப் பகுதிகளில் நீர் கோத்து மற்றும் அழுகல் வேர்க்கிழங்குகள் வரை பரவும் இது மென்மையழுகலுக்கான அறிகுறிகளாகும்
- கடைசியில் வேர் தாக்கப்பட்டதும் கண்டறியப்படும்
- இலை தொகுதி அறிகுறிகள் இளம் இலைகளின் முனையில் இளம் மஞ்சள் நிறமாக மாறி அது படிப்படியா இலைத்தாள்களுக்கு பரவும்
- ஆரம்ப காலத்தில் நோய் தாக்குதல் இலைகளின் நடுப்பகதி பச்சை நிறமாகவே இருக்கும் ஆனால் இலை விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
- இலைகளில் உள்ள மஞ்சள் நிறம் செடிகள் முழுவதும் கீழ் பகுதியில் இருந்து மேற் பகுதி வரை பரவி அதன் தொடர்ச்சியாக வாடி வதங்கி போலித்தண்டுகள் காய்ந்து விடும்
|
|
|
தாக்கப்பட்ட இஞ்சி |
கிழங்கு அழுகல் |
|
கட்டுப்பாடு:
- விதை வேர்க்கிழங்கை 0.3% மேன்கோசெப்பில் பக்குவப்படுத்தும் 30 நிமிடங்களுக்கு முன் இந்தக் கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதை விதைக்கும் முன் ஒரு முறை மறுபடியும் விதை நேர்த்தி செய்தால் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
- நோயைக் கட்டுப்படுத்த நன்கு வடி மண்ணை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். நீர் தேக்கத்தையும் முன்பே அகற்றி விட்டால் நோய் தாக்குதலில் இருந்து நாற்றுகளை பாதுகாக்கலாம்
- வேர்க்கிழங்குகளை நோய் தாக்காத தோட்டத்தில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் விதை வழியாகவும் இந்நோய் பரவும்
- ஒரு முறை இந்நோய் வயலில் தோன்றினால் உடனே தாக்கப்பட்ட கொத்தை அகற்றி, 0.3% மேன்கோசெப்பை தாக்கப்பட்ட இடத்தை சுற்றியும் சொட்டு சொட்டாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் பரவுதலை தவிர்க்கலாம்.
Image Source
https://www.plantvillage.com/ |