நுண்ணுயிரி வாடல் : ரால்ஸ்டோனிய சொலனாசிரம்
அறிகுறிகள்:
- போலித்தண்டின் கழுத்துப் பட்டை பகுதிகளில் தண்ணீர் போன்று புள்ளிகள் தோன்றும். பின் மேலும், கீழும் பரவி காணப்படும்
- முதலில் தெளிவாகத் தெரியும் அறிகுறிகள்அடி இலைகள் மிதமாக வாடும், இலை விளிம்புகள் சுருக்கமுற்று காணப்படும் பின் அது மேல் நோக்கி பரவும்
- முதலில் மஞ்சள் நிறம் அடி இலைகளில் தோன்றி படிப்படியாக மேல் இலைகள் வரை பரவும். ஆரம்ப நிலையில் செடிகளில் திடமான மஞ்சள் நிறம் மற்றும் வாடியும் காணப்படும்
- போலித் தண்டுகளில் உள்ள காற்றுக்குழாய் சார்ந்த திசுக்களில் ஆழ்ந்த கோடுகள் காணப்படும். தாக்கப்பட்ட போலித்தண்டு மற்றும் வேர்க்கிழங்குகளை அழுத்தினால் காற்றுக்குழாய் சார்ந்த பகுதிகளில் இருந்து மெதுவாக பால் போன்ற கசிவு வெளிவரும்
|
|
|
மஞ்சளாதல் |
தாக்கப்பட்ட பயிர்கள் |
|