பயிர் பாதுகாப்பு :: பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்
அடிச்சாம்பல் நோய் :

அறிகுறிகள்:

  • தேமல் நோயை போன்றே இளம் பச்சை நிற பகுதிகளுடன், அடர் பச்சை நிற பகுதிகள் இலையின் மேற்புறத்தில் தோன்றும்
  • ஈரமான காலத்தின் பொழுது, கீழ்ப்புளத்திலும், மங்கிய ஊதா நிறப் பூஞ்சாண் வளர்ச்சி காணப்படும்
  • முழு இலையம் விரைவில் காய்ந்து விடும்

கட்டுப்பாடு:

  • அதிக அளவு இடைவெளியும், நன்றான நீர் வடியக்கூடியதாகவும், காற்றோட்டமாகவும், வெயிலில் படுமூறு உள்ள வரப்பை தயார்செய்து வேண்டும்
  • மேன்கோசெப் 0.2% (அ) குளோரோதேலோனில் 0.2% (அ) டைபோலடான் 0.2% (அ) ரிடோனில் 72 0.1% தெளிக்க வேண்டும்
  • ஏப்ரான் எஸ்.டி.35 .2 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • மேன்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015