பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டு வெட்டும் வண்டு: ஸ்தினியாஸ் கிரிசேட்டர்

சேதத்தின் அறிகுறி

  • தண்டின் மீதுள்ள பட்டை முற்றிலுமாக கடித்து வெட்டப்பட்டிருக்கும்.
  • வெட்டப்பட்ட கிளைகள் காய்ந்து போகும்.

 

பூச்சியின் விபரம்

  • வண்டு சிறியதாக, நீண்ட உணர்கொம்புகளுடன் சாம்பல் நிறமாக இருக்கும்.
  • ‘கிரப்’ புழு அழுக்கடைந்த வெண்மையாக இருக்கும்.

 

கட்டுப்பாடு

  • முட்டையிடுதலை தடுக்க தளர்வாக உள்ள மரப்பட்டையை நீக்க வேண்டும்.
  • மரத்தின் பாதிப்படைந்த பகுதிகளை சேகரித்து அளிக்க வேண்டும்.
  • கார்பரில் 50 WP 2G உடைய பஞ்சு உறையை தண்டுப் பகுதியில் வைக்க  வேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 1 மிலி / 1 லி தண்ணீர் கலவையை தண்டுப்பகுதி, கிளை மற்றும் கொடிகளில் வழிந்தோடும் அளவிற்கு தெளிக்க வேண்டும்.
  • பின்வரும் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கவும்.
    • போசலோன் 35 EC 0.07%
    • குயினல்பாஸ் 25 EC 0.05%
    • கார்பரில் 50 WP 0.1% முதல் சுற்று பட்டையை நீக்கியவுடன் வைக்க வேண்டும். பின்பு 2-3 முறை தொடர்சசியாக வைக்க வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015