தத்தும் இலை வண்டு
சேதத்தின் அறிகுறி
- இளந்துளிர்கள் கடிக்கப்பட்டு நிறைய துவாரங்கள் காணப்படும். புழுக்கள் வேர்களைக் கடித்து கொடிகளை வாடச்செய்யும்.
பூச்சியின் விபரம்
- வண்டு மிகச் சிறியதாக சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக முதுகில் ஆறு கரும்புள்ளிகளுடன் இருக்கும்.
கட்டுப்பாடு
- வண்டுகளைச் சேகரித்து அழித்தல்.
- உரிந்துவரும் பட்டைகளை உரித்துவிட்டால் வண்டு முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.
- கவாத்து செய்தபின் வளரும் புதுத் தளிர்கள் மீது ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஃபாசலோன் 2 மி.லி எனும் அளவில் கலந்து தெளிக்கலாம்.
|
|
|
|
இலைகளில் துப்பாக்கி குண்டுத்துளைகள் |
புழு |
பூச்சி |
|