பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மாவுப்பூச்சி: பெர்ரிசியா விர்கேட்டா

அறிகுறிகள்:

  • பழங்கள் முதிர்வதற்கு முன்பே உதிர்ந்து விடும்.

பூச்சியின் விபரம்

  • இளம் பூச்சி – மஞ்சள் நிறத்திலிருந்து இளம் வெள்ளை நிறமாக மாறும்.
  • பூச்சி – நீளமாக, தட்டையாக, மெழுகு போன்ற சுரப்பு சூழ்ந்திருக்கும்.

கட்டுப்பாடு :

  • கொடிகள் மற்றும் கிளைகளை பட்டை உரித்து, மீத்தைல் பாராத்தியான் பசையை அளிக்க வேண்டும்.
  • சேதமடைந்த பட்டைகள், இலைகள், கொம்புகள், தண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • 5 செ.மீ நீளத்தில் பழங்களை தாங்கியுள்ள கிளைகளின் மீத ஒட்டுப் பொறியை பயன்படுத்த வேண்டும்.
  • டைகுளோர்வாஸ் 76 wsc 0.15% ஐ மீன் எண்ணெய் ரோசின் சோப் (25 கிராம்) கலந்து பயன்படுத்த வேண்டும்.
  • டைமெத்தோயேட் 30 கிகி + மண்ணெண்ணய் 150 மிலியை 100 மிலி நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
  • குயனைல்பாஸ் 25 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் தூவ வேண்டும்.
  • இரைவிழுங்கியான கிரிப்டோலேமியஸ் மான்ட்டோஜெர்ரி 10 வண்டு/கொடி என்ற அளவில் விடவும்.
  • ஒட்டுண்ணிகளாக  அனாக்ரஸ் டேக்டோலோப்பி, க்ணானுஸோய்டியா மிர்ஜயை வயலில் விடவும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015