பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மாவுப்பூச்சி: மேக்கோ நெல்லி காக்கஸ் ஹிர்சுதஸ்

சேதத்தின் அறிகுறி

  • காய்க்கொத்துக்களில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சி பழங்களைச் சிறியதாக்கி புளிப்படையச் செய்யும். மகசூல் வெகுவாகக் குறையும்.

பூச்சியின் விபரம்

  • வெண்ணிற மாவு போன்று இருக்கும்.

கட்டுப்பாடு

  • வருடத்திற்கு இருமுறை கவாத்து (pruning) செய்ய வேண்டும்
  • ஏக்கருக்கு 500 முதல் 600 க்ரிப்டோலீமஸ் மாண்ரோஸியரி (Cryptolaemus montrouzier) எனும் பொறி வண்டுகளை விட வேண்டும் (கொடிக்கு 6 முதல் 8 வண்டுகள் எனும் விகிதத்தில்) பொறிவண்டுகள் விடுமுன் பூச்சிக் கொல்லித் தெளிப்பை நிறுத்த வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015