பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் நோய்கள் |
அடிச்சாம்பல் நோய்: ப்ளாஸ்மோபாரா விட்டிகோலா
அறிகுறிகள்
- ஒழுங்கற்ற, மஞ்சள் நிறத்தில், ஒளி கசியும் புள்ளிகள் இலையின் மேற்புறத்தில் தோன்றும்
- இலையின் அடிப்பகுதியில் வெள்ளை நிற துகள் போன்று காணப்படும்
- தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள், பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும்
- முதிரா நிலையிலேயே இலைகள் உதிர்ந்துவிடும்
- இளம் தண்டு் குட்டையாக மாறிவிடும்
- பழுப்பு நிற, ஆழ்ந்த நைவுப்புண் தண்டின் மேல் தோன்றும்
- பழங்களின் மேல் வெள்ளை நிறப் பூசணம் வளரும். அதைத் தொடர்ந்து தோல் போன்று மாறி உதிர்ந்து விடும்
- நோய் தாக்கப்பட்ட பழங்களில் இருந்து மென்மை அழுகல் நோயின் அறிகுறிகள் தென்படும்
- பழங்களின் தோல் வெடிப்பு இல்லாமல் காணப்படும்
- பரவுதல்: பூசணவித்துக்கள் காற்று, மற்றம் மழை மூலம் பரவும்
- ஊடுருவல் : ஊஸ்போர்ஸ் தாக்கப்பட்ட இலைகள், தண்டுகள் மற்றும் பழங்களில் தோன்றும். செயலற்ற பூசண இழைகள் தாக்கப்பட்ட கொம்புகளில் காணப்படும்
- உகந்த வெப்பநிலை: 20-220 செ
- ஈரப்பதம் : 80-100 சதவீதம்
கட்டுப்பாடு
- 1%போர்டியாக்ஸ் கலவை அல்லது மெட்டலாக்சில் + 0.4 % மேன்கோசெப்பை தெளிக்கவும்
|
|
|
|