சாம்பல் நோய்: அன்சினுலா நெக்கேட்டர்
அறிகுறிகள்
- சாம்பல் நோய் வளர்ச்சி அதிகமாக இலையின் மேற்புறத்தில் தோன்றும்
- பாதிக்கப்பட்ட இலைகள் உருவமாற்றமும், நிறம்மாறியும் காணப்படும்
- தண்டின் நிறம் மாறி ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் மாறிவிடும்
- பூக்களை தாக்குவதால் பூக்கள் உதிர்ந்து, பழம் பிடிப்பதை குறைத்துவிடுகிறது
- முதலில் பழங்கள் தாக்கப்படுவதால், தாக்கப்பட்ட பழங்கள் உதிர்ந்துவிடும்
- சாம்பல் நோய் முதிர்ந்த பழங்களின் மேல் காணப்படும். நோய் தாக்கப்பட்டதால் பழங்களின் மேல் காணப்படும். நோய் தாக்கப்பட்டதால் பழங்களின் தோல்களில் வெடிப்புகள் ஏற்படும்
- இவை காற்று வழி பூசண வித்துக்கள் மூலம் பரவும்
- செயலற்ற பூசண இழைகள் மற்றும் பூசண வித்துக்கள் தாக்கப்பட்ட தண்டு மற்று மொட்டுகளில் தோன்றும்
- புழுக்கமான சூடான நிலையுடன் மந்தமான மேகமூட்டத்துடன் இருக்கும் வெப்பநிலை உகந்தது
கட்டுப்பாடு
- 0.25% கரிமமற்ற சல்பர் அல்லது 0.1% சினோமெத்யோனேட் அல்லது 0.05% டைனோகேப்பை தெளிக்கவும்
|
|