பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் நோய்கள் |
பறவைக் கண் புள்ளி/ஆந்த்தராக்னோஸ்: க்ளியோஸ்போரியம் ஆம்பெலோபேகம் (எல்சினோ ஆம்பெவீனா)
|
|
|
|
|
பழங்களின் மேல் ஆந்த்தராக்னோஸ |
தண்டுத் துண்டுகளின் மேல் நோய் |
இலைகளின் மேல் நோய் |
|
அறிகுறிகள்
- நோய்கள் முதன் முதலில் ஆழ்ந்த சிவப்பு நிறப் புள்ளிகள் பழங்களின் மேல் தோன்றும்
- இந்தப் புள்ளிகள் வட்ட வடிவில், ஆழ்ந்து, சாம்பல் நிறத்தில் காணப்படும். பின் இந்தப் புள்ளிகளைச் சுற்றி விளிம்புகளில் கருப்பு நிற மாறி பறவைக் கண் அழுகல் நோயை தோற்றுவிக்கும்
- இந்தப் புள்ளிகளின் அளவு 14 இன்ச் விட்டத்தில் இருந்து பழங்களின் பாதி வரை பரவும்
- தண்டுகள், பற்றிழைகள், இலைக்காம்புகள், இலை நரம்புகள், மற்றும் பழத் தண்டுகள் இவைகளை பூசணங்கள் தாக்கப்படும்
- அதிகப்படியான புள்ளிகள் சில சமயங்களில் இளம் தண்டுகளின் மேல் காணப்படும்
- இந்தப் புள்ளிகள் தண்டின் மேல் எலும்பு வளையம் போல் தோன்றி, நுனிகள் இறக்க நேரிடும்
- இலைக்காம்பு மற்றும் இலைகளின் மேல் உள்ள புள்ளிகளால் அவை சுருண்டும், வடிவம் சிதைந்தும் காணப்படும்
- விதை வழியாக திராட்சைச் செடி மற்றும் தண்டுத் துண்டுகளின் மேல் பரவும் பூசண வித்துக்கள் காற்று வழியாகப் பரவும்
- செயலற்ற பூசண இலைகள் தாக்கப்பட்ட தண்டுகளின் மேல் சொறி போன்று தோன்றும்
- சூடான ஈரப்பதமான வெப்பநிலை
- தாழ்வான பகுதியிலும் மிக மோசமாக நீர் வடியக்கூடிய மண்
கட்டுப்பாடு
- தாக்கப்பட்ட கொம்புகளை அகற்றவும்
- 0.2%காப்பர் ஆக்ஸில் க்ளோரைட் (அ) 0.25 மேன்கோசெப்பை பயன்படுத்தவும்
|
|
|