பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள் |
ஆந்தரக்னோஸ்: கொலிடோடிரைசம் லின்டிமுத்தியேனம்
அறிகுறிகள்
- இந்நோயை ஏற்படுத்தும் பூசணம் எல்லாவிதமான செடியின் வெளிப்பாகத்தை எந்த நிலையிலும் பாதிக்கிறது.
- இலையில், காய்களில் வட்டவடிவ கருப்பான புள்ளிகள், மத்தியில் அடர்நிறத்திலும் மற்றும் விளிம்பில் அடர் சிவப்பு ஆரஞ்சு நிறத்திலும் அறிகுறியை ஏற்படுத்துகிறது.
- தீவிர நோய்த்தாக்குதலில் பாதித்த பாகம் உதிர்ந்து விடுகிறது.
- விதை முளைத்தபின் நோய்த் தாக்கினால் நாற்றுக்கள் காய்ந்து விடுகின்றன.
கட்டுப்பாடு
- விதையை கார்பென்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
- மேங்கோசெப் 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் 0.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
|
|
|
|