பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள் |
செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா செனசென்ஸ்
அறிகுறிகள்
- சிறிய புள்ளிகள் நிறைய எண்ணிக்கையில் தோன்றி வெளிறிப்போன பழுப்பு நிறத்துடன் கூடிய புள்ளியையும் பழுப்பு கலந்த சிவப்பு நிற விளிம்பையும் கொண்டுள்ளது. இதே போன்ற புள்ளிகள் கிளைகளிலும் காய்களிலும் தோன்றுகிறது.
- சாதகமான சூழ்நிலை ஏற்படும் போத நிறைய இலைப்புள்ளிகள் தோன்றி அவை பூக்கும் மற்றும் காய்க்கும் சமயத்தில் அவ்விலைகள் உதிர்ந்துவிடுகின்றன.
கட்டுப்பாடு
- சுத்தமான சாகுபடி முறையை மேற்கொள்ளவேண்டும்.
- நோய் தாக்காத விதையைப்பயன்படுத்தவேண்டும்.
- குறைந்த அளவு செடிகளின் எண்ணிக்கையை வைத்திருத்தல் வேண்டும். செடிகளுக்கு இடையே அகலமான இடைவெளி விடுதல்வேண்டும்.
- நிலத்தில் போர்வை போன்ற கழிவுகளைக் கொண்டு போர்த்தினால் நோயின் தாக்கம் குறைந்து மகசூல் அதிகரிக்கும்.
- விதைத்த 30 நாட்களுக்கு பின்பு கார்பன்டாசிம் 0.5 கிராம் / லிட்டர் அல்லது மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
|
|
|
|