பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள் |
இலைப்பரப்பு நெளிவு நோய்: இலைப்பரப்பு நெளிவு வைரஸ்
அறிகுறிகள்
- இளம் செடியின் இலையில் வெளிறிப்போன தோற்றமும், நரம்புகளில். கிளைகளில், விளிம்புகளில் இவ்வகையான தோற்றமும் காணப்படுகிறது.
- இலையின் பரப்புகள் சுருண்ட வடிவுடனும் கீழே தொங்கிய தோற்றத்துடனும் காணப்படும்.
- சில இலைகள் திருகிய தோற்றத்துடன் காணப்படும்.
- இலையின் பரப்பு சிவப்பு கலந்த நிறத்திலும், இது இலையின் காம்பு வரை நீடிக்கும்.
- விதைத்த பல நாட்களுக்குப் பின் (இறுதி) நோய் தாக்கினால் இலைகள் சுருண்டுவிடும் அளவு குறையும், ஆனால் இலைகள் வெளிறிப்போன தோற்றத்துடனும் காணப்படும்.
- விதையின் வயலில் நோய் தாக்குகிறது.
- விதைத்த 45 நாட்கள் வரை பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றவேண்டும்.
- அசிபேட் 1 கிராம் அல்லது டைமீத்தோயேட் 2 மில்லி / லிட்டர் என்ற அளவில் தெளித்தால் நோய் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தலாம்.
|
|
|
|