பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள் |
மஞ்சள் தேமல்நோய்: முங்பீன் மஞ்சள்
அறிகுறிகள்
- முதலில் லேசான மஞ்சள் நிறப்புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றுகின்றன. இச்சிறிய புள்ளிகள் அளவில் பெரியதாகி சில இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கின்றன.
- பாதிக்கப்பட்ட இலைகளில் இறந்த செல்களை உடைய திசுக்கள் காணப்படுகின்றன.
- நோயினால் பாதிக்கப்பட்ட இலைகள் வளர்ச்சியின்றியும், மெதுவாகவும் முழுமையடைகின்றன மற்றும் சிறிய பூக்களையும் காய்களையும் தோற்றுவிக்கின்றன.
- பாதிக்கப்பட்ட செடிகளின் காய்கள் அளவில் குறைந்தும் மஞ்சள் நிறத்திலும் மாறுகின்றன.
- இந்நோய் பெமிசியா டெபசி எனப்படும் வெள்ளை ஈயினால் கடத்தப்படுகிறது.
கட்டுப்பாடு
- சோளத்தை வரப்புப்பயிராக வரிசையில் விதைக்கவேண்டும்.
- விதையை இமிடாகுளோபிரிட் 70 டபிள்யூ எஸ் 5 மில்லி / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்து நோய் பரப்பும் நச்சுயிரியை அழிக்கவேண்டும்.
- இவ்வைரஸினால் பாதிக்கப்பட்ட செடிகளை இளம் பருவத்திலேயே களைந்தெரியவேண்டும்.
- ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொல்லி ஏதாவது ஒன்றை இலைகளில் டைமீதேயேட் 750 மில்லி / எக்டர், விதைத்த 30 நாட்கள் கழித்து தெளிக்கலாம்.
|
|
|
|