பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள் |
வேர் அழுகல் மற்றும் இலைக்கருகல் நோய்: ரைசக்டோனியா சொலனி
அறிகுறிகள்
- இந்நோய்க்காரணி விதைகளில் நோயையும், வேரழுகல் நோய் அறிகுறியும், நாற்றழுகல் அறிகுறியையும், தண்டுகளில் வெடிப்பையும் ஏற்படுத்துகின்றன.
- காய்கள் உருவாகும் சமயத்தில் இந்நோய் பரவுகிறது.
- முதல் நிலைகளில், விதை அழுகல், நாற்றழுகல், வேர்கள் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
- பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பழுப்பு நிறக்கோடுகளை ஏற்படுத்துகின்றன.
- இவ்வகையான கோடுகள் சேர்ந்து, பெரிய அழுகல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலைகள் முதிர்வதற்கு முன் உதிர்ந்துவிடுகின்றன.
- வேர் மற்றும் வேரின் அடிப்பாகத்தில் கருப்பு நிறத் தோற்றமும், பட்டைகள் உரிந்தும் காணப்படுகின்றன.
- பாதிக்கப்பட்ட இலைகள் விரைவில் காய்ந்து விடுகின்றன.
- பாதிக்கப்பட்ட செடியின் வேரை பிளந்து பார்த்தால், சிவப்பு நிற தோற்றமும் உள் திசுக்கள் அழுகியும் காணப்படும்.
- இந்நோய் காரணி மண்ணின் மூலம் பரவுகிறது.
கட்டுப்பாடு
- மேங்கோசெப் 2.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
|
|
|
|