பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
ரோமப்புழு: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா, அமாஸ்க்டா மூரி

தாக்குதலின் அறிகுறிகள்

  • ரோமப்புழு இலையின் பச்சையத்தை சுரண்டி உண்ணும்
  • நன்கு வளர்ச்சியடைந்த புழு இலையின் நரம்பு பகுதியை விட்டு விட்டு இடைப்பட்ட இலைபகுதியை உண்டு சேதப்படுத்தும்
  • அதிகமாக தாக்கப்பட்ட செடிகள் ஆடு, மாடு மேய்த்தது போல் நுனிக்குருத்து வெட்டப்பட்டு காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: பழுப்பு நிறத்திலிருக்கும், உடலின் மேற்பரப்பில் நீளமான சிகப்பு கலந்த பழுப்புநிற முடிகள் காணப்படும்.
  • அந்துப்பூச்சி: முன் இறகானது வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற கோடுகளுடன் காணப்பாடும், பின் இறகானது வெள்ளை நிறத்தில் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.

அமாஸ்க்டா மூரி:

  • அந்துப்பூச்சி: முன் இறகானது வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற கோடுகளுடன் காணப்படும்.

 

 

 

Groundnut Groundnut
புழு அந்துப்பூச்சி

 

கட்டுப்படுத்தும் முறை:

  • கோடைக்காலங்களில் நிலத்தை உழவு செய்து ரோமப்புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
  • விளக்குப் பொறியை 3-4 வீதம் அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறி வைத்திருக்கும் பகுதியில் முட்டைக்குவியலை சேகரித்து அழிக்கலாம்.
  • இளம் புழுக்களை கைகலால் சேகரித்து அழிக்கலாம்.
  • துவரை மற்றும் தட்டைப்பயிறு ஆகியவற்றை ஊடுகயிராக பயிர் செய்து இளம் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
  • வயலைச் சுற்றிலும் 30 செ.மீ நிளம் மற்றும் 25 செ.மீ அகலம் இருக்கும் அளவிற்கு சிறிய அளவில் குழிகள் அமைத்து அதன் முலம் புழுக்களை அழிக்கலாம்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
  • பாசலான் 35 EC 750 மி.லி/எக்கடர் என்ற அளவில் 375 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் டைகுளோரோவாஸ் 76 EC 627 மி.லி/எக்கடர்

வைரஸ் பெருக்கம்:

  • அமாஸ்கடா அல்பிஸ்ட்ரைக்கா புழுவை வயலிருந்து சேகரித்து ஒரு நாள் இரவு முழுவதும் உணவு எதுவும் அழிக்காமல் தனிமைப்படுத்த வேண்டும். பின்பு நியுக்ளியஸ் வைரஸ் கலைவையால் நனைக்கப்பட்ட கேலோட்ரோபஸ் இலைகளை நன்கு காயவைத்து அந்த இலையை அல்பிஸ்ட்ரைக்கா புழுவிற்கு உணவாக 1 அல்லது 2 நாட்களுக்கு அளிக்க வேண்டும். அதன்பிறகு 3 வது நாளில் சுத்தமான கேலோட்ரோபஸ் இலைகளை உணவாக அளிக்க வேண்டும். அடுத்த 5 வது நாளில் புழுவனாது இறக்கும் .இறந்த புழுவானது வைரஸ் தாக்குதலால் இளஞ்சிகப்பு நிறமாக மாறி,தலைப்பகுதியானது கீழே தொங்கி,இறுதில் உடல் பகுதி வெடித்து காணப்படும் இந்நிலையில் இந்த பாதிக்கப்பட்ட புழுவை எடுத்து நண்கு சுத்தமான நிரில் ஊரவைத்து அதை அரைத்து சுத்தம் செய்து வைரஸ் கலவை தாயரிக்கலாம்.
  • ஒரு எக்கடருக்கு 750 புழுக்கள் வீதம் வைரஸ் கலவை தயாரிக்க தேவைப்படும்.இதனுடன் ஒட்டும் திரவம் 250 மி.லி. அல்லது 350 லிட்டர்,இந்த வைரஸ் கலவையை மாலை நேரத்தில் தெளிப்பது சிறந்தது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015