பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பொன்வண்டு: ஸ்பினோடீரா இண்டிகா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • தாக்கப்பட்ட செடிகள் காய்ந்துவிடும்
  • புழு தண்டினைத் துளைத்து உட்சென்று உண்ணும்
  • தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கினால் அதற்கு அடியில் புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: பழுப்பு நிறமுடையது, மெதுவாக நகரக்கூடியது
  • வண்டு: பளப்பளப்பாக, சிகப்பு (அ) பச்சை நிறத்திலிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • கோடைக்காலங்களில் நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்
  • நன்கு மட்கிய தொழு உரங்களை இட வேண்டும்
  • பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அகற்றிவிட வேண்டும்.
  • ஒட்டுண்ணிகளான பிராக்னிட்ஸ்,ட்ரைக்கோகேரமிட்ஸ் மற்றும் நிக்கிளியிஸ் வைரஸ்,பச்சை மஸ்கட்ரைன் பூச்சை ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்தலாம்.
  • கார்போபீயுரான் குருணை மருந்தினை ஹெக்டர்க்கு 2.25 கிலோ வீதம் தூவி பொன்வண்டின் தாக்குதலைத் தவிர்க்கலாம்



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015