பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெள்ளைப்புழு: கோலோட்ரைக்கியா செரோட்டா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • புழு வேர்களையும், காய்களையும் உண்டு சேதப்படுத்தும்
  • தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து மடிந்துவிடும்

பூச்சியின் அடையாளம்:

  • முட்டை: உருண்டையாகவும், வெள்ளை நிறத்திலும் இருக்கும்
  • புழு: புழு வெள்ளைக் கலந்த மஞ்சள் நிறமாகவும், C வடிவிலும் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
    • கார்போபியுரான் 3% CG 33.3 கி.கி/ஹெக்டேர்
    • குளோரோபைரிபாஸ் 20% EC 1000 மி.லி /ஹெக்டேர்
    • போரேட் 10 CG 25 கி.கி/ஹெக்டேர்

 

 

Groundnut


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015