பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
சுருள்பூச்சி: அப்ரோஏரிமா மோடிசெலா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு இரண்டு அல்லது மூன்று இலைகளை ஒன்றாக பிணைத்துவிடும்
  • புழு இலையின் திசுக்களுக்கிடையே ஊடுருவிச் சென்று பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்
  • தாக்கப்பட்ட இலைகள் காய்ந்துவிடும்
  • சேதம் அதிகமாகும் நிலையில் தாக்கப்பட்ட பயிர்கள் தீயினால் எரிக்கப்பட்டது போல் காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

  • முட்டை:  வெள்ளை நிறமுடையது, பெண் அந்துப்பூச்சி இலையின் அடிப்புறத்தில் முட்டையைக் குவியல்களாக இடும்
  • புழு: பச்சை நிறமாகவும், கருமை நிறத்தலையையும் கொண்டிருக்கும்
  • அந்துப்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும், முன்னிறக்கையில் வெண்ணிற புள்ளிகளைக் கொண்டிருக்கும்

 

Ground nut Groundnut Groundnut

கட்டுப்படுத்தும் முறை:

பொருளாதார சேத நிலை: 1 புழு/ மிட்டர் வரிசை

  • விளக்குக்கவர்ச்சி பொறியை எக்டர்க்கு 12 வீதம் அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
    • டைமீத்தேயேட் 30 EC 660 மி.லி/ஹெக்டேர்
    • மாலத்தையான் 50 EC 1.25 மி.லி/ஹெக்டேர்
    • மீத்தைல்திமத்தான் 25% EC 1000 மி.லி/ஹெக்டேர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015