பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிக்குவா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழு இலையின் அடிப்பகுதியை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்
  • வளர்ச்சியடைந்த புழு இலையின் நடுப்பகுதியை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை உண்டு சேதப்படுத்தும்

பூச்சியின் அடையாளம்:

  • முட்டை: பெண் அந்துப்பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் முட்டைக் குவியல்களாக இடும்
  • புழு: ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். உடலின் இரண்டு ஓரங்களிலும் மஞ்சள் நிற முடிகள் காணப்படும்
  • கூட்டுப்புழு: உதிர்ந்த ரோமங்களை கொண்டு கூடு கட்டி அதனுல் இருக்கும்
  • அந்துப்பூச்சி: ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும் இரண்டு கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும்

Groundnut

கட்டுப்படுத்தும் முறை:

  • கோடைக்காலங்களில் நிலத்தை உழவு செய்து ரோமப் புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
  • ரோமப்புழு உண்ணக்கூடிய மாற்று பயிர் வகைகளையும் களைகளையும் சேகரித்து அகற்றிவிட வேண்டும்
  • தட்டைபயிறு, ஆமணக்கு மற்றம் காட்டாமணக்கு ஆகிய பயிர்களை வயலின் வரப்புகளில் கவர்ச்சி பயிராக பயிரிட்டு ரோமப்புழுவை சேகரித்து அழிக்கலாம்.
  • கைகலால் சேகரித்து அழிக்க வேண்டும்
  • கேலோட்டோரோபிஸ், காட்டமணக்கு மற்றும் ப்பபாளி கிளைகளை வயிலில் வைத்து ரோமப்புழுவை கவர்ந்தியிலுத்து அழிக்கலாம்.
  • இயற்கை எதிரிகளான சிலந்தி பூச்சி, வெட்டுகிளி, எறும்புகள், தட்டான் ,பொறி வண்டுகள் ,பரக்கானிட் ஒட்டுண்ணி மற்றும் மஸ்கடைன் பூச்சை இவற்றை கொண்டு ரோமப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளை நீயுக்ளியார் பரலிஹெகட்ரோசிஸ் வைரஸை எக்டர்க்கு 500 வைரஸ் தாக்கிய புழுக்களிலிருந்து பெறப்படும் வைரஸ் நச்சு என்ற முறையில் தெளித்து இளம்புழுக்களை நன்கு கட்டுப்படுத்தலாம்.
  • பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டும்பொழுது குயினால்பாஸ் 2 மிலி (அ) குளோர்பைரிபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து இளம் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015