பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
அமெரிக்கன் காய் புழு: கெலிகோவெர்பா ஆர்மிஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுவானது இலை, மொட்டு மற்றும் மலர்களை உண்டு சேதப்படுத்தும்
  • புழு மொக்குகளில் ஊடுருவி சென்று, திசுவை உண்ணுகிறது

பூச்சியின் அடையாளம்:

  • முட்டை: பெண் அந்துப்பூச்சி மஞ்சள் நிற முட்டைகளை தனித்தனியே இலையின் மேற்பகுதியில் இடுகின்றது
  • புழு: முட்டையிலிருந்து வெளிவரும் புழு பச்சை அல்லது பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்
  • அந்துப்பூச்சி: அந்துப்பூச்சியின் பழுப்புநிற முன் இறக்கையில் V - வடிவக் கோடு இருக்கும். பின் இறக்கையின் ஓரப்பகுதி அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்

 

Groundnut

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • கோடைக்காலங்களில் நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்
  • ஊடுபயிராக தட்டைபயிரை 5 அல்லது 6 வரிசைகளுக்கு இடையில் பயிர் செய்தால் பெண் அந்துப்பூச்சி முட்டைகளை தட்டைப்பயிரில் இடும். பின்னர் முட்டைகளை சேகரித்து அழிக்கலாம்.
  • இனக்கவர்ச்சிப் பொறியை எக்டர்க்கு 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரைமா கைலானிஸ் எக்டர்க்கு 1 லட்சம் (அ) கிரைசோபெர்லா கார்னியாவை எக்டர்க்கு 50,000 வீதம் நட்ட 50 நாட்களுக்கு பிறகு வெளியிட்டு காய்த்துளைப்பானை நன்குக் கட்டுப்படுத்தலாம்.
  • இயற்கை எதிரிகளான சிலந்தி பூச்சி,வெட்டுகிளி,எறும்புகள், தட்டான் ,பொறி வண்டுகள் ,பரக்கானிட் cட்டுண்ணி மற்றும் மஸ்கடைன் பூச்சை இவற்றை கொண்டு ரோமப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
    • குயினால்பாஸ் 2மிலி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்
    • குளோர்பைரிபாஸ் 3 மிலி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்
    • இமிடாகுளோபிரிட் 2 மி.லி1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015