பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
தத்துப்பூச்சி: எம்போஸ்கா கெரி |
தாக்குதலின் அறிகுறிகள்:
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது
- வளர்ந்த பூச்சிகள் விஷத்தன்மையுள்ள உமிழ்நீரை உட்செலுத்துவதால் தாக்கப்பட்ட இலைகளில் உள்ள நரம்புகளால் வெண்மையாக மாறி விடுகிறது
- சேதம் அதிகமாகும் போது பயிர்கள் தீயினால் எரிந்தது போல் காணப்படும்
பூச்சியின் அடையாளம்:
- அந்துப்பூச்சி: வளர்ந்த பூச்சிகள் பச்சை நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
- பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்
- ஊடுபயிராக கம்பை பயிர் செய்வதால் தத்துப் புச்சியைக் கட்டுப்படுத்தலாம்
- ஆமணக்கு - நிலக்கடலை ஊடுபயிரை தவிர்த்தல் வேண்டும்
- டைமீத்தோயேட் 650 மிலி மருந்தை ஹெக்டர்க்கு 600 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
|
|
|
|
|