பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் பூச்சிகள்
காய் துளைப்பான:் கோனேகீதஸ் பங்டிபெராலிஸ்
சேதத்தின் அறிகுறி:
  • புழுக்கள் காய்களில் துளையிட்டுச் சென்று உண்ணும்.
  • காய்ந்து பழுக்கும் முன்னரே விழுந்துவிடும்.

பூச்சியின் விபரம்:

  • புழு பழுப்பு நிற தலையையும், இளஞ்சிவப்பு உடலில் சிறு மெல்லிய உரோமங்களையும் பெற்றிருக்கும்.
  • தாய்ப்பூச்சி சிறியதாக மஞ்சள் நிற இறக்கையில் நிளைய கருப்புப் புள்ளிகளுடன் இருக்கும்.
  • ஆண்பூச்சி உம்பின் பின்பகுதி நுணியில் கருமையான முடிக்கொத்தும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட பழங்களை எழுத்து அழித்து விடவும்.
  • விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.
  • மாலத்தியான் 50 இ.சி. 0.1 சதவிதம் மருந்தினை பூக்கும் தருணத்திலும் காய்ப்பிடிக்கும் தருணத்திலும் தெளிக்கவேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015