மரப்பட்டைப்புழு: இன்டார்யேலா டெரா ஒனிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- பட்டை துளைப்பான் இளம் வயது மரங்களை அதிக அளவில் தாக்குகிறது.
- புழு மரப்பட்டையை துளைத்து உள்ளே சென்று வலைப்பின்னலை உருவாக்கி உணவுக் கடத்தும் திசுவை உண்கிறது.
- புழு இரவு நேரங்களில் மட்டும் மரப்பட்டையை உண்ணுகிறது பகல் நேரங்களில் மரத்துளைகளில் மறைந்து வாழ்கிறது.
பூச்சியின் விபரம்:
- புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும்
- வண்டு - மஞ்சள் நிறமுடையது முன் இறக்கையில் பழுப்பு நிற கோடும், பின் இறக்கையில் வெண்ணிற பட்டைக்கோடு இருக்கும்
- ஆண் வண்டு சிறியதாகவும் பெண் வண்டு பெரியதாகவும் இருக்கும்.
|
|
அறிகுறி |
முதிர்பூச்சி |
கட்டுப்படுத்தும் முறை:
- மரத்தின் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்கி அழிக்க வேண்டும்.
- நிலக்கரி தார் + மண்ணெண்ணெய் 1:2 அல்லது கார்பெரில் 50 wp 20 / 1 பகுதி தண்ணீர் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும்.
- வண்டுகள் முட்டையிடுவதை தடுக்க தளர்வாக உள்ள மரப்பட்டைகளை நீக்கிவிட வேண்டும்.
- மோனோகுரோடோபாஸ் 36 WSC 10 மிலி 2.5 செமீ உறிஞ்சும் பஞ்சில் தேய்த்து மரத்தில் வைக்க வேண்டும்.
- கொக்கி கொண்டு துளையிலிருந்து பூச்சியை வெளியே எடுத்துவிட வேண்டும்.
- பிறகு மோனோகுரோடோபாஸ் 36 WSC 10 முதல் 20 மிலி துளையில் தடவ வேண்டும்.
- கார்போப்யூரான் 3G 5கி துளையில் வைத்து பின் மண் கொண்டு துளையை அடைக்கவும்.
Image Source:
http://www.nbair.res.in/insectpests/Indarbela-tetraonis.php |