பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெள்ளை ஈ: அலிரோடைக்கஸ் டிஸ்பர்சஸ்
சேத்தின் அறிகுறி:

  • குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சும்.
  • பூச்சிகளின் தேன் போன்ற கழிவுப் பொருளின் படிவால் இலை மற்றும் பூங்கொத்துக்களில் கருமையான பூசணம் வளரும்.
  • இலைகள் மஞ்சளாக மாறும்.
  • தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்துவிடும்.

பூச்சியின் விவரம்:

  • சிறு வெண்ணிற பூச்சிகள் இலைகளில் அடை அடையாக மாவுப்பூச்சிகளைப் போன்று காணப்படும். அதிகாலையில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வயலை சுத்தமாக வைக்க வேண்டும்.
  • களைகளை அகற்ற வேண்டும்.
  • மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • தாக்குதல் அதிகமாக இருந்தால் இமிடாகுளோப்ரிட் 200 எஸ்.எல் 0.01 சதவீதம் (அ) ட்ரை அசோபாஸ் 40 இ.சி. 0.06 சதவிதம் தெளிக்கலாம்.
  • வேப்ப எண்ணெய் 3 சதவிதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவிதம் தெளிக்கலாம்.
  • கிரிப்டோலேமஸ் மாண்டரொஸரி பொறிவண்டை விட்டு கட்டுப்படுத்தலாம்.
  • என்கார்சியா ஷெய்டெரிஸ், என்கார்சியா காடெல்பே ஆகிய ஒட்டுண்ணிகளை விடலாம்.

Image Source: Krishna gowda
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015