பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் நோய்கள் |
பாசி இலைப்புள்ளி நோய்
அறிகுறிகள்:
- நோய் பாதித்ததின் அறிகுறியாக இலையின் மேற்புறத்திலும், கீழ்புறத்திலும் துரு நிறத்தில் அடர்த்தியான புள்ளிகளுடன் காணப்படும்.
- இப்புள்ளிகளை துண்டுகளாக்கினால், மெல்லிய வெள்ளை அல்லது கரு நிறத்தில் ஓடு போன்று இலைகளில் காணப்படும்.
- இந்தப் புள்ளிகள் ஒருங்கிணைந்து இலைகளில் படர்ந்திருக்கும். இவை முதிர்ந்த நிலையின் போது தெளிவற்ற சாம்பல் பச்சை நிறத்தில் காணப்படும்.
கட்டுப்பாடு:
- தகுந்த சாகுபடியான உரமிடுதல், நீர் பாய்ச்சல், கவாத்து செய்வதன் மூலம் காற்றோட்டமாகவும் மற்றும் சூரிய கதிர்களினாலும் களைகளை கட்டுப்படுத்தல், மரங்களுக்கு இடைவேளி அமைப்பதன் மூலம் பாசி இலைப்புள்ளி நோயினை கட்டுப்படுத்தலாம்.
- காப்பர் ஆக்ஸிக்ளோரைட் – 0.25% அளவில் தெளிப்பதன் மூலம், பூச்சி, வண்டு, இலை உதிர்தல் மற்றும் புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
|
|
|