பயிர் பாதுகாப்பு :: பலாபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்

பின் நோக்கி காய்தல்: போட்ரிபோடிப்ளாய்டியா தியோப்ரோமே

அறிகுறிகள்

  • மரப்பட்டைகள் நிறம் மாறியும், கருப்பாக மாறி முனை வரை பரவி பின் நோக்கி காய்ந்து காணப்படும்
  • இளம் பச்சைக் கொம்புகளின் அடிப்பகுதி முதலில் வாட ஆரம்பிக்கும் பின் அது படிப்படியாக இலையின் விளிம்புகளில் உள்ள நரம்புகள் வரை பரவி வாட நேரிடும்
  • பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமாக மாறி, அதன் விளிம்புகள் மேல் நோக்கி சுருண்டு காணப்படும்
  • இந்த நிலையில் கொம்புகள் அல்லது கிளைகள் வாடி இறக்க நேரிடும் பின் அந்தக் கொம்புகள் அல்லது கிளைகள் வாடி இறக்க நேரிடும் பின் அந்தக் கொம்புகள் உதிர்ந்துவிடும்
  • பாதிக்கப்பட்ட கிளைகளில் இருந்து பிசின் போன்று கசிவு ஏற்படும். இந்தக் கிளைகள் தண்டு துளைப்பானால் மீண்டும் பாதிக்கப்படும்
  • பாதிக்கப்பட்ட கொம்புகளில் உட்புறம் நிறமாற்றம் ஏற்படும்

கட்டுப்பாடு

  • பாதிக்கப்பட்ட கொம்புகளை வெட்டிய பின் 0.1% கார்பன்டாசிம் அல்லது 0.2% க்ளோரோதலோனிலை தெளித்தால் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
  • தண்டு துளைப்பான் மற்றும் துளை துளைப்பானைக் கட்டுப்படுத்த உகந்த பூச்சிக் கொல்லியை பயன்படுத்தி அழிக்க வேண்டும். இதுவே பின் நோக்கி காய்தல் நோயைக் குறைக்க முக்கியமான ஒன்றாகும்

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015