பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
மொக்கு துளைப்பான்: ஹென்டிகாசிஸ் டூபளிஃபெசியாலிஸ்
சேதத்தின் அறிகுறிகள்
- புழு மொக்குகளைத் துளைத்து சாப்பிடும்.
- தாக்கப்பட்ட மொக்குகள் இலேசான மெல்லிய நூலாம்படையில் பின்னப்பட்டிருக்கும்.
பூச்சியின் விபரம்
- புழு பச்சையாக கருந்தலையுடன் இருக்கும்.
- அந்துப்பூச்சி, வெண்ணிற அந்துப்பூச்சி, வெள்ளை இறக்கையில் பழுப்பு நிறக்கோடுகளுடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
- தாக்கப்பட்ட மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
- விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
- வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்கலாம்.
- 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மாலத்தியான் கலந்து தெளிக்கலாம்.
- செடிகளை சீரான கவாத்து செய்து, தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
|
|
|