பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பிணைக்கும் புழு: எலாஸ்மோபால்பஸ் ஜாஸ்மினோஃபேகஸ்
சேதத்தின் அறிகுறிகள்
  • புழு பூ மொக்குகளைத் துளைத்து சேதப்படுத்தும்.
  • இளந்துளிர்களும், பூ மொக்குகளும் சேர்ந்து பின்னப்பட்டிருக்கும்.
  • மேலும் புழுக்களின் கழிவுப்பொருள்களும் அவற்றின் மேல் இருக்கும்.
பூச்சியின் விபரம்
  • புழு : பச்சை நிறமாகவும், சிவப்புத் தலையுடன் உடலின் பக்கவாட்டில் பழுப்பு நிறக்கோடுகளுடன் இருக்கும்.
  • அந்துப்பூச்சி : சிறியதாகவும், சாம்பல் நிறத்துடனும் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
  • தாக்கப்பட்ட மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
  • விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்கலாம்.
  • 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மாலத்தியான் கலந்து தெளிக்கலாம்.
  • செடிகளை சீரான கவாத்து செய்து, தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015