பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
இலைச்சேர்க்கும் புழு: நோசினோ ஜீயாமிட்ராலிஸ்
சேதத்தின் அறிகுறிகள்
- புழுக்கள், இலைகளையும், கிளைகளையும் ஒன்றாக பிணைத்துவிடும்.
- பிணைக்கப்பட்ட இலைகளை அரித்துத் தின்பதால் அவை சல்லடைபோல் ஆகியிருக்கும்.
பூச்சியின் விபரம்
- புழு : பச்சையாகவும், மெல்லிய மயர்கற்றைகளுடனும், மார்புப் பகுதியில் கருப்புக் கோடுகளுடனும் இருக்கும்.
- அந்துப்பூச்சி : இளம் பழுப்பு இறக்கையில் வெள்ளைப்புள்ளிகளுடன் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
- தாக்கப்பட்ட மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
- விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
- வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்கலாம்.
- 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மாலத்தியான் கலந்து தெளிக்கலாம்.
- செடிகளை சீரான கவாத்து செய்து, தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
|
|
|