சிவப்பு பயிர்ச்சிலந்தி: டெடரானைக்கஸ் சின்னாபரினஸ்
சேதத்தின் அறிகுறிகள்
- சிலந்திகள் இலையின் அடிப்பரப்பிலிருந்து நூலாம்படையினை உருவாக்கி அதனுள்ளிருந்து சாப்பிடும்.
- இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிறப்புள்ளிகள் இருக்கும் பிறகு சிவப்பாக மாறிவிடும்.
- தாக்கப்பட்ட இலைகள் வாடிவிடும்.
- பூக்களில் உருவாவது குறைந்துவிடும்.
பூச்சியின் விபரம்
- வெண்ணிற கோள வடிவ முட்டை இலையின் அடிப்பரப்பில் காணப்படும்.
- சிலந்தி சிவப்பு நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
- தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழிக்கவும்.
- 1 லிட்டர் தண்ணீரில் 1.5 மிலி ைக்கோஃபால் (அ) 2 கிராம் நனையும் கந்தகத்தூள் கலந்து தெளிக்கவும்.
|
|