தாக்குதலின் அறிகுறிகள்
- ஆரம்ப நிலைகளில் இலைகள் உதிரும்
- காயின் உள்ளே புழுக்கள் தலையை மட்டும் உள்ளே விட்டு, உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும்
- காயைச் சுற்றி வட்டவடிவ துளைகள் இருக்கும்
பூச்சியின் விபரம்:
- முட்டைகள் : வட்டவடிவில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக காணப்படும்.
- புழுக்கள் : பச்சை நிறத்திலிருந்து பழப்பு நிறம் வரை மாறி மாறித் தோன்றும். பச்சை கலந்த சுடர் பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும். வெள்ளை நிற வரிகளுடன் சுடர் மற்றும் மங்கிய நிற வளையங்களுடன் காணப்படும்.
- கூட்டுப்புழு : பழுப்புநிறத்தில், மண் இலை, காய் பயிர்க் குப்பைகளில் காணப்படும்
- தாய்ப்பூச்சி : மங்கிய பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து இருக்கும். முன்னிறக்கைகள் சாம்பல் நிறத்திலிருந்து மங்கிய பழுப்பு நிறம் வளர ‘வி’ வடிவ குறியுடன் காணப்படும்
பின்னிறைக்கைகள் மங்கிய வெள்ளை நிறத்துடன் அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்
|
காயை உண்ணும் புழுக்கள் |
சேதமடைந்த காய் |
|