பயிர் பாதுகாப்பு :: அவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

புள்ளிக்காய்ப்புழு : மெளருக்கா டெஸ்டூவாலிஸ்

அறிகுறிகள்

  • மொட்டுகள், பூக்கள், காய்களில் துளைக்குழிகள் காணப்படும்
  • தாக்கப்பட்ட காய்கள் மற்றும் பூச்சிகளில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விலைப் பின்னியிருக்கும்

பூச்சியின் விபரம்

  • புழுக்கள் : பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற தலையுடன் இருக்கும்.
  • இணை சுடர் புள்ளிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் பின்னால் இருக்கும்.
  • தாய்ப்பூச்சி : முன்னிறைக்கைள் : லேசான பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும். பின்னிறைக்கைகள் வெள்ளை நிறத்தில் பழுப்புநிற குறிகளுடன் பக்கவாட்டில் இருக்கும்.
Cowpea Cowpea

கட்டுப்பாடு :

  • பொருளாதார சேதநிலை: 3 / தாவரம்
  • இனக்கவர்ச்சி பொறி - ஹெளிகொவெற்ப ஆர்மிஜெரா 12/ஹெக்டேர்
  • Ha NPV 3 x1012 POB/ஹெக்டேர் + 0.1% டீபாள்
  • பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
  • அஜாடிராக்டின் 0.03 % WSP 2500 - 5000 கிராம்/ஹெக்டேர்
  • பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் சேறோவர் குரூஸ்டாக்கீ (3a, 3b, 3c) 5 WP 1000- 1250கிராம்/ஹெக்டேர்
  • இமாமெக்டின் பென்சோயேட் 5%SG 220 கிராம்/ஹெக்டேர்
  • இன்டாக்சோகார்ப் 15.8 SC 333 மி.லி/ஹெக்டேர்
  • குயிநால்போஸ் 45% EC 1400 மி.லி/ஹெக்டேர்
  • பாசலோன் 0.07%  (திரவம் 625 மிலி / ஹெக்டர் தெளிக்க வேண்டும்)

குறிப்பு: காக்ஸி நெல்லிட் செயல்பாடு காணப்படும் போது, பூச்சிக்கொல்லி பயன்பாடு தவிர்க்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015