இலைப்பேன்: திரிப்ஸ் ஸிம்பிளக்ஸ்
அறிகுறிகள்:
- லில்லி பூக்கள், குமிழ்கள் உருமாறி, நிறம் மாறியிருக்கும்.
- பூக்கள் மற்றும் மொட்டுக்கள் மூடியிருக்கும் (அ) ஒழுங்கற்ற முறையில் திறந்திருக்கும்.
- தாக்கப்பட்ட பரப்புக்கள் எப்பொழுதும் போல் பளபளப்பாக இல்லாமல், வெள்ளை கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை – வெள்ளை நிறத்தில், மென்மையாக, பீன்ஸ் வடிவத்தில் இலை திசுக்கள் மற்றும் கிழங்குகளில் படிந்திருக்கும்.
- பூச்சி – பால் – வெள்ளை நிறத்தில், தோன்றி பின் பழுப்பு நிறமாக மாறும்.
- இறக்கைகளின் அடிப்புறத்தில் மாறுப்பட்ட வரிகள் இருக்கும்.
கட்டுப்பாடு:
- பூக்கள் உருவாகும் சமயத்தில் மீத்தைல் பாரத்தியான் 1 மிலி தெளித்தல்.
- கிழங்குகளை லிண்டேன் மருந்தை சேமிப்பதற்கு முன் தூவி நேர்த்தி செய்ய வேண்டும்.
- மோனோகுரோட்டாபாஸ் உடன் நேர்த்தி செய்து 190° செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவாக வைத்து சேமித்தல்.
- தாக்கப்பட்ட குமிழ்களை மீத்தைல் ப்ரோமைடு உடன் புகையூட்டம் செய்தல் (அ) சுடு நீரில் 43.9° செல்சியஸ் வெப்பநிலையில் முக்கி எடுக்க வேண்டும்.
- திம்மிட் 4-10 கிலோ/ஹெக்டர் மண் அளிப்பு செய்தல்
|
|