தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு தண்டினைத் துளைத்து உள்ளே சென்று பகுதியைத் தின்று சேதம் விளைவிக்கும்
- இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும்
- வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும்
பூச்சியின் விபரம்:
- புழு: புழுக்கள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். தலை பழுப்பு நிறத்துடன் காணப்படும்
- அந்துப்பூச்சி: தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி குருணைகளை மணலுடன் (50 கிலோ) கலந்து விதைத்ததிலிருந்து 20 நாட்கள் கழித்து இலைகளில் படும்படியாக தூவ வேண்டும்
- தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணி ட்ரைகோகர்மா கைலோனிஸ் 2,50,000 என்ற எண்ணிக்கையில் மூன்று முறை ஒரு வார இடைவெளியில் வயலில் விடவும் மற்றும் மூன்றாவது முறையில் புழு ஒட்டுண்ணி கோட்டிசா பேலிவிபஸ் 5,000 என்ற எண்ணிக்கையில் விடவும்.
- பூச்சிக்கொல்லி குருணைகளை பயன்படுத்தாதபொழுது பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிச் கொல்லியைத் தெளிக்கவும்
- கார்பரில் 50 WP 1 கிலோ
- டைமிதோயேட் 30% EC 660 மி.லி/ஹெக்டேர்
|
|
|
|
இலைகளில் துவாரங்கள் |
துளைக் குழி |
காய்ந்த நடுக்குருத்து |
|
|
கூட்டுப்புழு மற்றும் புழு |
அந்துப்பூச்சி |
|