பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
கதிர் துளைப்பான்: ஹெலிகோவெர்பா ஆர்மீஜீரா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதம் விளைவிக்கும். புழுவின் சேதக்கழிவுகள் தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: உருண்டை வடிவமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்
- புழு: பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும்.
- கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில் இலை, காய் மற்றும் மண்ணினுள் காணப்படும்
- அந்துப்பூச்சி: பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும். முன் இறக்கை பச்சை கலந்த பழுப்பு நிறத்திலும், பின் இறக்கை வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
- இனக்கவர்ச்சி பொறி 12/ஹெக்டேர் என்ற எண்ணிக்கையில் அமைத்து ஆண் அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
- என்.பி.வி @1.5x1012 POB + நாட்டுச் சர்க்கலை 2.5 கி.கி + பருத்தி விதை பொடி 250 கி என்ற அளவில் கலந்து மக்காச்சோள கதிர்களில் படும்படியாக இரண்டு முறை வீதம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்
- கதிர் வெளிவந்த 18 நாட்களுக்கு பிறகு கீழ்காணும் மருந்தினுள் ஏதேனும் ஒன்றினைத் தூவி அந்துப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்
- கார்பரில் 10 D 25 கிலோ
- மாலத்தியான் 5 D 25 கிலோ
- பாசலோன் 4 D 25 கிலோ
|
|
|
|
|
இளம் பூச்சி |
முதிர் பூச்சி |
|
|
|