பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
கதிர் நாவாய் பூச்சி: கலோக்கோரிஸ் அங்கஸ்டேடஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் கதிர் பால்பிடிக்கும் தருணத்தில் சாறை உறிஞ்சுகிறது
- பாதிக்கப்பட்ட கதிர் பால் பிடிக்காமல் சுருங்கி பழுப்பு நிறத்தில் இருக்கும்
- குஞ்சுகள் ஆரஞ்சு மற்றும் வெளிரிய பச்சை நிறமாகவும், தாய்பூச்சியுடன் கதிர்களில் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: உருண்டையாக நீல நிறத்தில் இருக்கும்
- குஞ்சுள்: ஒடுங்கியும், பச்சை நிறமாகவும் காணப்படும்
- தாய்ப்பூச்சி: ஆண் தாய்ப்பூச்சி பச்சை நிறமாகவும், பெண்தாய்ப்பூச்சி பச்சை நிறமாகவும், ஓரத்தில் பழுப்பு நிறமாகவும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- கீழ்காணும் ஏதாவது ஒரு மருந்தினை கதிர் வரும் தருவாயில் மூன்றாவது மற்றும் பதினெட்டாவது நாளில் தெளிக்கவும்
- கார்பரில் 10 D 25 கிலோ/ஹெக்டேர்
- மாலத்தியான் 5 D 25 கிலோ/ஹெக்டேர்
- பாசலோன் 4 D 25 கிலோ/ஹெக்டேர்
- வேப்பம் கொட்டை வடிநீர் 5 சதவீதம்
- அசடிராக்டின் 1 சதவீதம்
|
|
தாய்ப்பூச்சி |
|
|
|