பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
தத்துப்பூச்சி: பைரில்லா பெர்புஸில்லா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகள் மஞ்சள் நிறத்தில் தோன்றும்
- இலைகளில் கருமையான பூசணத்தினால் மூடப்பட்டிருக்கும்
- மேற்பகுதியில் உள்ள இலைகள் காய்ந்தும், பக்கவாட்டில் மொட்டுகள் முளைக்கத் துவங்கும்
பூச்சியின் விபரம்:
- குஞ்சுகள்: ஆரஞ்சு நிறத்திலும், குஞ்சுகளின் பின்பகுதியில் வால் போன்ற அமைப்பு காணப்படும்
- தத்துப்பூச்சி: வளர்ந்த தத்துப்பூச்சி மஞ்சள் நிறத்திலும் கூரிய மூக்குடனும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- தேவைக்கு அதிகமான பசுந்தாழ் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
- விளக்குப் பொறி அமைத்து தத்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
- நட்ட 150 மற்றும் 210 நாட்கள் கழித்து தோகை உரிப்பதன் மூலம் குஞ்சுகளையும் முட்டைகுவியலையும் அழிக்கலாம்
- முட்டைப்புழு ஒட்டுண்ணியான எப்ரிகிரேனியா மெலனோலூகா எக்டருக்கு 8000-10,000 குஞ்சுகள் (அ) 8-10 இலட்சம் வீதம் வெளியிட்டு தத்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்
- கீழ்காணும் மருந்தினை 150வது மற்றும் 210வது நாளில் தெளிக்கலாம்
- மாலத்தியான் 50 EC 2000 மி.லி
|
|
முதிர் பூச்சி |
|
|
|