பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்
அடிச்சாம்பல் நோய்: பெரனோஸ்கிளிரோஸ்போரா சொர்கி

அறிகுறிகள் :

  • இலையில் வெளிறிய கீற்றுகள் தோன்றுவது முக்கிய அறிகுறி ஆகும். 
  • செடியானது, குட்டையாகவும், வளர்ச்சி குன்றியும், கணு இடைவெளி குறைந்தும் காணப்படும். 
  • வெண்மையான சாம்பல் பூச்சானது இலையில் அடியிலும், அதற்கு இணையான இலையின்  மேற்பரப்பிலும் காணப்படும். 
  • முழுமையாக விரியாத பசுமையான ஆண் மலர்களின் உறையின் இப்பூச்சானது காணப்படும். 
  • ஆண் மலரில் சில நேரங்களில் சிறிய இலைகள் போன்ற பகுதி தோன்றும். 
  • இவ்விலைகளிலும் சாம்பல் பூச்சு காணப்படும். 
  • தண்டின் பக்க மொட்டுகளில் இருந்து பக்கவாட்டு கிளைகள் தோன்றும் (கிரேஸி டாப்).      
இலைகளில் வெளிறிய கீற்றுகள்

சாதகமான சூழ்நிலை

  •  குறைந்த தட்பவெட்பம் (21 - 33 டிகிரி): அதிக ஒப்பு ஈரப்பதம் (90 சதம்) மற்றும் தூறல்
  •  இளம் செடிகள் மிக அதிகமாக பாதிக்கப்படும்

மேலாண்மை

  • அடிச்சாம்பல் நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அறிகுறிகள் தெரிந்தவுடன் பிடுங்கி அழிக்கவும்.
  • சிறந்த நோய் எதிர்ப்பு இரகமான – கோ எச் (எம்) 6 விதைக்கலாம்.
  • சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும்.
  • மெட்டாக்சில் @ 1000 கி / ஹெக்டர் மேங்கோசெம் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் விதைத்த இருபதாம் நாள் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016