பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள் |
இலைக்கருகல்: ஹெல்மின்தோஸ்போரியம் டர்சிகம், ஹெல்மின்தோஸ்போரியம் மெய்டிஸ் |
அறிகுறிகள் :
- இளம் பயிரையே தாக்கக் கூடியது.
- சிறிய மஞ்சள் நிறமான வட்ட (அ) முட்டை வடிவ புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
- நாளடைவில் இப்புள்ளிகள், நடுவில் வைக்கோல் நிறத்திலும், பழுப்பு நிறமான விளிம்புடன், நீள்வட்ட வடிவ புள்ளிகளாக விரிவடையும்.
- நாளடைவில் கருகி காணப்படும்.
- புள்ளிகளின் மீது பசுமை கலந்த ஆலிவ் நிறத்தில் பஞ்சு போன்ற கொனியா மற்றும் கொனிடியா தண்டுகள் காணப்படும்.
சாதகமான சூழ்நிலை
- சாதகமான தட்பவெட்பம் 8 - 27 டிகிரி செல்சியஸ் டிலியோ வித்துக்கள் முளைக்க ஏற்ற வெப்பநிலை.
|
|
|
நீள் வட்டப்புள்ளிகள் |
|
மேலாண்மை
- அடிச்சாம்பல் நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அறிகுறிகள் தெரிந்தவுடன் பிடுங்கி அழிக்கவும்.
- நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான சார்டாஸ், டெக்கான் 105, ட்ரிசுலேட்டா, டெக்கான் 109, பயிரிடலாம்.
- மெய்டிஸ் கருகல் நோய்க்கு, நோய் எதிர்ப்புத்திறன் இரகங்களான டெக்கான், விஎல் 42, பிரபாத், கேஹச்.5901, ஈபி ஆர் ஓ – 324, 339, ஐசிஐ – 701, எஃப் – 701, எஃப்- 7012, சார்டஸ், டெக்கான் 109, கோ ஹச் 6 பயிரிடலாம்.
- சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும்.
- மெட்டாக்சில் @ 1000 கி / ஹெக்டர் மேங்கோசெம் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் அறிகுறி தென்பட்டவுடன் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
|
|