பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்

துரு நோய் : பக்ஸினியா சொர்கி

அறிகுறிகள்:

  • வட்ட வடிவ பருப் போன்ற துகள்கள் ஆங்காங்கே இலையின் மேல் தோன்றும் மற்றும் பயிர் முதிர்ச்சி அடையும் போது, துகள்கள் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் மாறும். 
  • யூரிடோ வித்துக்களும், டீலியோ வித்துக்களும் தோன்றும்.

சாதகமான சூழ்நிலை

  • குறைந்த தட்பவெட்பம் 10 - 12 டிகிரி செல்சியஸ் டிலியோ வித்துக்கள் முளைக்க ஏற்ற வெப்பநிலை.
இலையில் பழுப்பு கட்டிகள்

கட்டுப்பாடு:

  • மாற்று ஊண் வழங்கியை அழித்தல் .
  • சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும்.
  • மான்கொசெப் 1.25 கிலோ /எக்டர் தெளித்தல்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016