ப்யூசேரியம் தண்டழுகல்: ப்யூசேரியம் மொனிலிபார்மி
- இந்நோய் வறண்ட பகுதிகளிலும், வெப்பமான பகுதியிலும் காணப்படுகிறது.
அறிகுறிகள்:
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடி வாடியும், இலைகள் இளம்பச்சை முதல் வெளிர் பச்சை நிறமுடையதாகவும், கீழ்த்தண்டுப்பகுதி வெளிர் நிறமுடையதாகவும் காணப்படுகிறது.
- தண்டின் உள்பகுதியில் உள்ள திசு சேதமடைகிறது. வாஸ்குலார் திசுவை தவிர மற்ற தண்டின் உள்பகுதியில் சிவப்பு நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.
- இந்நோயை உண்டாக்கக்கூடிய பூசணம் வேரின் வழியாக நுழைந்து தண்டின் கீழ்பகுதியில் வளர்கிறது.
- பூத்தபின் நோய் தாக்கினால், உமியின் மேல்புறம் நிறமற்றதாகவும், வெளிர் நிற தோற்றத்தை உடையதாகவும் காணப்படுகிறது.
கட்டுப்பாடு:
- பொட்டாசியம் வகையினாலான உரத்தை பயன்படுத்துவதால் சேதாரம் குறைகிறது.
- பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து பெறும் விதைகளை பயிரிடக்கூடாது.
- பயிர் சுழற்சி செய்யவேண்டும்.
- நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான - இரன்ஜித் மற்றும் கங்கா 5 பயிரிடலாம்.
- ஒரு முறை கலப்பு செய்யப்பட்ட இரகங்களான - சிம் 103 x சிஎம் 104, சிஎம் 400 x சிம் 300 ஐ பயிரிடலாம்.
|
|