மேய்டிஸ் கருகல்: பைபோலாரிஸ் மேடிஸ்
அறிகுறிகள்:
- இளம் புள்ளிகள் சிறியதாகவும், வைரத்தைப் போன்ற வடிவுடையதாக இருக்கும்.
- இவை பெரியதாகும் போது, நீளமாகவும் இருக்கும். இவ்வகையான இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து, இலையில் எரிந்துபோன தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
- இவ்வகையான புள்ளிகள் வீரிய இரகத்திற்கும், மற்ற இரகத்திற்கும் மாறுபடுகின்றன.
கட்டுப்பாடு:
- மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
- நோய் எதிர்ப்புக் கொண்ட இரகங்களான டெக்கான், விஎல்42, பிரபாத், கேஹச்.5901, ஈபிஆர்ஓ-324, 339, ஐசிஐ - 701, எஃப் - 701, எஃப் - 7012, சார்டஜ், டெக்கான் 109 பயிரிடலாம்.
|
|